சேனையதிபன் நம் கர்த்தருக்கே

1. சேனையதிபன் நம் கர்த்தருக்கே
செலுத்துவோம் கனமும் மகிமையுமே
அற்புதமே தம் அன்பெமக்கு – அதை
அறிந்தே அகமகிழ்வோம்

ஜெய கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்
ஜெய கீதங்கள் நாம் பாடியே
ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்
ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே

2 தாய் மறந்தாலும் நான் மறவேன்
திக்கற்றோராய் விட்டுவிடேன்
என்றுரைத் தெம்மைத் தேற்றுகிறார்
என்றும் வாக்கு மாறிடாரே – ஜெய கிறிஸ்து

3. மேய்ப்பனில்லாத ஆடுகட்கே
நானே நல்ல மேய்ப்பன் என்றார்
இன்ப சத்தம் பின் சென்றிடுவோம்
இன்பப் பாதை காட்டிடுவார்- ஜெய கிறிஸ்து

4. சத்துருவின் கோட்டை தகர்ந்தொழிய
சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க
சாத்தானின் சேனை நடுங்கிடவே – துதி
சாற்றி ஆர்ப்பரிப்போம் – ஜெய கிறிஸ்து

5. கறை, திரை முற்றும் நீங்கிடவே
கர்த்தர் நம்மைக் கழுவிடுவார்
வருகையில் எம்மைச் சேர்க்கும் வரை
வழுவாமல் காத்துக் கொள்வார் – ஜெய கிறிஸ்து



senaiyathipan nam karthdharukke

1. senaiyathipan nam karthdharukke
seluththuvom kanamum makimaiyume
arbudhame dham anbemakku – athai
arinththe akamakizhvom

jaya kiristhu mun selkirar
jayamaka nadaththiduvar
jaya keedhangkal nam padiye
jayak kodiyum eetrriduvom
jayam alleluya avar namaththirke

2. thay maranththalum nan maraven
thikkarroray vittuviden
endruraith themmaith thetrrukirar
endrum vakku maridare – jaya kiristhu

3. meybpanillada aadukadka
nane nalla meypan endrar
inpa sathdham bin sendriduvom
inpab pathai kattiduvar- jaya kirisathu

4. saththuruvin koddai dhakarnththozhiya
saththiyam niththiyam nilaiththongka
saththanin senai nadungkidave – thuthi
sarri aarbparippom – jaya kirisuthu

5. karai, thirai murrum neengkitave
karthdhar nammaik kazhuviduvar
varukaiyil emmais serkkum varai
vazhuvamal kaththuk kolvar – jaya kiristhu